சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 153 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பாக தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களின் முகாம் அலுவலகத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ், ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், கழக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ, கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.