ஈரோடு மாவட்டத்தில் வருகிற 17.09.2024 அன்று மிலாடி நபியை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.2/எப்.எல்.3 மதுபான விடுதிகள்/ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மேற்கண்ட தினத்தில் மூடப்பட வேண்டும் எனவும், அன்றைய தினத்தில் மது விற்பனை இல்லாத நாளாக (Dry Day) அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து 17.09.2024 அன்று முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.2/எப்.எல்.3 மதுபான உரிமதலங்கள் மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினத்தில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தெரிவித்துள்ளார்.
17.09.2024 அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. ஈரோடு கலெக்டர் தகவல்...
September 14, 2024
0