09.09.2024 திங்கட்கிழமை திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில், ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம், VET IAS இளம் அரிமா சங்கம் சார்பில் ஈரோடு கல்வி மாவட்டத்தில் உள்ள 218 அரசுப்பள்ளி நூலகத்திற்கு ஜெம் டாக்டர். பழனிவேலு அவர்களின் சுயசரிதை நூல் "எதுவுமின்றி" என்ற புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழா மாண்புமிகு அமைச்சர் சு. முத்துசாமி அவர்களின் தலைமையிலும், அரிமா மாவட்ட ஆளுநர் அவர்களின் தலைமையிலும் சிறப்பாக நடைபெற்றது.
மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் நூல் மதிப்பீட்டை சிறப்பாக எடுத்துரைத்தார்.
மேலும், மகிழ்வுரையை ஜெம் மருத்துவமனை சேர்மன் டாக்டர்.பழனிவேலு அவர்கள் கொடுத்தார்.
இந்த விழா சுப்ரீம் அரிமா சங்கத்தால் நடத்தப்பட்டது. முன்னாள் பன்னாட்டு இயக்குனர் அரிமா K.தனபாலன் அவர்கள் தலைமையில் திட்ட தலைவர் V.A.குணசேகரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விழாவின் வெற்றிக்கு முன்னாள் ஆளுநர் அரிமா D.ரவிச்சந்திரன், சுப்ரீம் சங்க தலைவர் S.அசோக்குமார், செயலர்கள் குமார், ராஜமாணிக்கம், பொருளாளர் கதிர்வேல் மற்றும் பட்டைய தலைவர் குமாரசாமி, முன்னாள் தலைவர்கள் கணேசன், SLPT சச்சிதானந்தம், பாலகிருஷ்ணன், ரமேஷ், தங்கமுத்து மற்றும் இளம் அரிமா சங்கத்தினர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பேரூதவி புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதில், பொதுமக்கள், மாணவர்கள் மொத்தம் 2000 பேர் பங்கேற்றார்கள்.