தமிழ்நாடு அரசின் சார்பில், "போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு" குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பான குறும்படங்கள் ஒளிபரப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து, நேற்று (13.09.2024) ஈரோடு மாவட்டம், சிக்கைய்ய நாயக்கர் கல்லூரி, குமலன் குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திண்டல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் "போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு" தொடர்பான விழிப்புணர்வு குறும்படமானது ஒளிபரப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இவ்விழிப்புணர்வு குறும்படத்தினை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டனர்.