ஈரோடு மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட 39 -ஆவது வார்டில் பகுதி சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பகுதி சபை கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர் கீதாஞ்சலி செந்தில்குமார் தலைமை வகித்தார். ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். மனிஷ், மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், நான்காம் மண்டல தலைவர் குறிஞ்சி என்.தண்டபாணி, மண்டல உதவி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர். மனுக்கள் மீது ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம், காங்கிரஸ் இரண்டாம் மண்டல தலைவர் ஜாபர் சாதிக், மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், சரண்யா சங்கமேஸ்வரன், மங்கேஸ்வரன் புனிதன், கேபிள் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.