தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் ஈரோடு மாநகராட்சி மண்டலம் 1 மற்றும் அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஈரோடு வைராபாளையம் அருள்நெறி திருப்பணி மன்றம் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் இன்று நடைபெற்றது.
இந்த சிறப்பு மருத்துவ முகாம் மண்டல தலைவர் ப. க.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், துணை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். மனிஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் இ.பி.ரவி, புனிதா சக்திவேல், சி.ரவி, சரண்யா சங்கமேஸ்வரன், ஜெகதீஷ், முருகேசன் மற்றும் மருத்துவ குழுவினர் கார்த்தீபன், அனிதா குமாரி, அருண், காந்தி, கீர்த்தனா மற்றும் கட்சி நிர்வாகிகள், 24 -வது வட்ட திமுக நிர்வாகிகள் மோகனசுந்தரம், பழனிச்சாமி, முத்துசாமி, முத்துசாமி, சுப்பிரமணி, சின்ராசு, சுரேஷ், ஜெயபால், பாலமுருகன், கவின் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். முகமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாநகர மருத்துவ நல அலுவலர் டாக்டர். பிரகாஷ் கலந்து கொண்டு நன்றியுரையாற்றினார்.