Type Here to Get Search Results !

ஈரோடு. 5,98,189 நோயாளிகள் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்துகள் பெற்று, பயனடைந்து வருகின்றனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டம் 05.08.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சமணப்பள்ளி கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் நோக்கம் தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் வாயிலாக உரிய பரிசோதனை செய்யப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு வீடு தேடி சென்று மருந்து மாத்திரைகள் மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படுகிறது. 2 மாதத்துக்கு ஒருமுறை இந்நோயாளிகள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி நோய் தாக்கம் குறித்து நிலையறிந்து, தொடர் சிகிச்சைபெற இத்திட்டம் வழிவகுக்கிறது. நோயின் தாக்கத்தால் நோயாளிகளுக்கு இருதயம், சிறுநீரகம், கண்கள் மற்றும் பாதம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிப்புகளை தவிர்த்து நோயினை கட்டுக்குள் வைத்து கொள்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். மருத்துவ கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உயர் இரத்த அழுத்த நோய் பரவல் சராசரி 24.43ள%, நீரிழிவு நோய் பரவல் சராசரி 7.28%, மற்றும் இரண்டு நோய்களுக்குமான பரவல் சராசரி 10.12%, ஆகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்பட்டவர்கள் 3,20,222 (17.57%,), நீரிழிவு நோய் கண்டறியப்பட்டவர்கள் 1,44,173 (7.91%,) மற்றும் இரண்டு நோய்களும் உள்ளவர்கள் 1,33,794 (7.34%,) ஆக மொத்தம் 5,98,189 நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். மாநில தரவுகளின் படி உயர் இரத்த அழுத்தம், நீரழிவு நோய் ஆகியவற்றின் சராசரி பரவல் குறியீட்டினை அடைய வேண்டுமெனில் பொதுமக்கள் போதுமான விழிப்புணர்வுடன் 100%, பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

இத்திட்டத்திற்காக ஈரோடு மாவட்டத்தில் 375 மகளிர் தன்னார்வலர்கள் 375 துணை சுகாதார நிலைய பகுதிகளுக்கு பணியமர்த்தப்பட்டு பொதுமக்களின் வீட்டிற்கே சென்று உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை மேற்கொண்டு நோய் அறிகுறி உடையவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி மருத்துவரது ஆலோசனை பெற வலியுறுத்துவதுடன், மருத்துவரால் உறுதி செய்யப்பட்ட உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்குவதுடன் தொடர் கண்காணிப்பிற்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு சென்று அங்கேயே பணிபுரிவோருக்கு
பரிசோதனை நடத்தப்பட்டு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை
வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தின் கீழ் இயன் முறை சிகிச்சையும் வழங்கப்பட்டு
வருகிறது. இதில் வலி நிவாரண சிகிச்சையில் 9,336 நபர்கள் மற்றும் இயன்முறை சிகிச்சையில் 27,582
நபர்களும் இதுவரையில் பயனடைந்துள்ளனர்.

மக்களைத்தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் உயர் இரத்த அழுத்த சிகிச்சைக்காக மருந்துகள் பெற்று பயனடைந்து வரும் ஈரோடு மாவட்டம், பவானி, ஜம்பை பகுதியைச் சேர்ந்த குருவாள் அவர்கள் வயது 66 தெரிவிக்கையில்,

எனக்கு உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட எனக்கு ஒருவரது துணையோடுதான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது வீடு தேடி வந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு இலவசமாக மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்குகிறார்கள். இதனால் எனக்கு நேரமும், செலவும் மீதமாகிறது. இச்சிறப்பான திட்டத்தினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் திங்களூர், பணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த திருமதி.மாராள் அவர்கள், பெருந்துறை, விஜயமங்கலம், கம்புளியாம்பட்டியைச் சேர்ந்த  ராமதாஸ் அவர்கள் உள்ளிட்ட மலைக்கிராம மக்கள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சிறப்புகளை அறிந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் பரிசோதனை மேற்கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.