தமிழ் மாநில காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் எம். யுவராஜா மற்றும் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனை இணைந்து, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் காலனி சமுதாயக் கூடத்தில் இன்று மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
இந்த இலவச மருத்துவ முகாமில், பொது மருத்துவம், இருதய சிகிச்சை, மகளிர் நல சிகிச்சை துறை, எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை துறை காது, மூக்கு, தொண்டை நல அறுவை சிகிச்சை மருத்துவம், பொது மற்றும் குடல் அறுவை சிகிச்சை துறை, குழந்தைகள் நல சிகிச்சை துறை, எலும்பியல் துறை ஆகியவற்றுக்கு சிறப்பான முறையில் மருத்துவம் மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாமை தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம். யுவராஜா அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் டி சந்திரசேகர், இளைஞர் அணி மாவட்டத் துணைத் தலைவர் மாயா மற்றும் வினோத்குமார், ரூபன், அருண் குமார், விஜி, செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.