ஈரோட்டில், நவீன மருத்துவ வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட ஜெம் மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. இங்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர் சி.பழனிவேலு கூறினார்.
கோவையை தலைமையிடமாக கொண்டு ஜெம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் ஈரோடு, திருப்பூர், புதுச்சேரி, சென்னை, பெருங்குடி, அமைந்தகரை மற்றும் கேரள மாநிலம் திருச்சூரில் இயங்கி வருகின்றன.
இங்கு குடல் மற்றும் இரைப்பை நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை எதிரில் உள்ள காந்தி நகர், முத்துக்கருப்பன் வீதியில் கடந்த 2015 ம் ஆண்டு ஜெம் மருத்துவமனை திறக்கப்பட்டது. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்களுக்கு 'லேப்ராஸ்கோப் 'பிக்' எனப்படும் நுண்துளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சுமார் 36 ஆயிரம் பேருக்கு லேப்ராஸ்கோப்பிக், 75 ஆயிரம் பேருக்கு பொது சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜெம் மருத்துவமனை அதே இடத்தில் கூடுதல் மருத்துவ வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதி, நவீன மருத்துவ உபகரணங்கள், ஆய்வகங்கள் வசதிகளுடன் ஜெம் மருத்துவமனை புதிப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா 08.09.2024 அன்று நடந்தது.
விழாவுக்கு மருத்துவமனை தலைவர் டாக்டர் சி.பழனிவேலு தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி புதிய மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அவருடன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் சசி ரேகா, நிர்வாக இயக்குனர் ஜெயா பழனிவேலு, தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அசோகன், இயக்குனர் பி.செந்தில்நாதன், மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பி.பிரவீன்ராஜ், செயல் இயக்குனர் பிரியா செந்தில்நாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
ஒருங்கிணைந்த சிகிச்சை விரிவாக்கம் செய்யப்பட்ட ஜெம் மருத்துவமனை ஜீரண மண்டலத்துக்கான சிறப்பு லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை மையமாக உள்ளது. உணவுக்குழாய் நோய்கள், கல்லீரல், கணையம், பித்தப்பை அறுவை சிகிச்சைகள், குடலிறக்க பிரச்சினைகளுக்கான அறுவை சிகிச்சை உள்பட வயிறு சார்ந்த அத்தனை நோய்களுக்கும் ஒருங்கிணைந்த சிகிச்சை மையமாக உள்ளது.
இதற்காக நவீன கருவிகள் கொண்ட ஆய்வகங்கள், சி. டி. ஸ்கேன், அல்ட்ராசோனா கிராபி, எக்ஸ்-ரே வசதிகளுடன் மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர். சி.பழனிவேலு கூறும்போது, "நோய்களின் தன்மையை முழுமையாக கண்டறிந்து மேம்படுத்தப்பட்ட உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில் ஜெம் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஈரோட்டில் ஜெம் மருத்துவமனை கேஸ்ட்ரோ என்டேரோலாஜி எனப்படும் இரைப்பை குடலியல் துறையில் முன்னணி மருத்துவமனையாக விளங்கும்" என்றார்.
விழாவில் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.