ஈரோடு மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மொடக்குறிச்சி பேரூராட்சி மற்றும் ஈரோடு தனியார் கண் மருத்துவமனை சார்பில் மொடக்குறிச்சி செலம்ப கவுண்டம்பாளையம் உள்ள சமுதாயக் கூடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமை மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் சரவணன் துவங்கி வைத்தார். துணைத் தலைவர் எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்ற இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வி இளங்கோ, மகன்யா, ஆனந்த், பிரதீபா, முகேஷ், கண்ணுசாமி, தனலட்சுமி, பழனிச்சாமி, ஜெயலட்சுமி, பாபு, ஞானசேகர், செல்வராஜ், சித்ரா, காந்திமதி, ரவி, நல்லதம்பி ஆகியோர் பங்கேற்றனர்.
முகாமில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.