அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை யோகாவை கிராம மக்களுக்கு இலவசமாக கற்றுத் தரும் கிராமிய சேவை திட்டம் தமிழகத்தில் 343 கிராமங்களில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு 322 கிராமங்களில் நிறைவு பெற்றுள்ளது. 323 வது கிராமமாக ஈரோடு மண்டலம் 46 புதூரில் இத்திட்டம் நிறைவு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
ஈரோடு மண்டல தலைவர் வி.எம். வெங்கடாசலம் வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கௌசல்யா தேவி மகேந்திரன், எஸ். சுயம் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 46 புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர். பிரகாஷ், எஸ்.கே.எம்.அனிமல் பீட்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ் கே எம் மயிலானந்தன் அவர்கள் திட்டத்தை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார்.
இதில் பிரியா மஹால் சுப்ரமணி, கிராமிய சேவை திட்ட பேராசிரியர்கள் பன்னீர்செல்வம், விஜயராணி உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அனுபவமுறை பட காட்சிகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் செயலாளர் டி ஆர் ஆறுமுகம் நன்றியுரை ஆற்றினார்.