ஈரோடு வ உ சி பூங்கா அருகிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் "தகவல் அறியும் உரிமை சட்ட" விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் ஈரோடு ஈ.கே.எம்.அ.க. மதரஸா இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர் ச.சேட்டு மதார்சா அவர்களால் நடுவராக இருந்து தேர்வு செய்த மாணவ மாணவிகளுக்கு ஈரோடு மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார் அவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அருங்காட்சிய காப்பாட்சியர் பா.ஜென்சி மற்றும் பலர் உடன் இருந்தனர்.