மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வு மற்றம் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில், தாட்கோ திட்டத்தின் மூலம் நரிக்குறவர்களுக்காக தாளவாடி மலைப்பகுதியான, ஆனந்தபுரம் பகுதியில் 11 வீடுகளும், நம்பியூர் ஒன்றியம் கரட்டுப்பாளையத்தில் 24 வீடுகளும் கட்டப்பட்டு என 35 வீடுகளுகம் கட்டப்பட்டு வருகிறது.
அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், நம்பியூர் ஒன்றியம் கரட்டுப்பாளையத்தில் நரிக்குறவர்களுக்காக கட்டப்பட்டு வரும் 24 வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் 12 வீடுகளுக்கு லிண்டல் மட்டம் பணிகளும் நடைபெற்று வருவதுடன், 12 வீடுகளுக்கு மேற்கூரை மட்டம் வரை செங்கல் பணிகள் முடிவடைந்துள்ளது. மேற்படி கட்டப்பட்டு வரும் வீடுகளின் மதிப்பீடு தலா ரூ.5.07 இலட்சம் என 24 வீடுகளுக்கு ரூ.1.22 கோடி ஆகும். இத்துடன் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு செல்ல ரூ.57.00 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினையும், ரூ.7.40 இலட்சம் மதிப்பீட்டில் வீதிகளுக்கு தெருவிளக்கு வசதி அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், பயனாளிகளிடம் கலந்துரையாடி அவர்களிடம் அடிப்படை தேவைகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் (தாட்கோ வீடுகள் திட்டம்) செங்கோடன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.