மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்துவரும் தாய் அல்லது தந்தையரை இழந்த மாணவ - மாணவிகள் 17 பேருக்கு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் தீபாவளிக்கான புத்தாடைகளை 29.10.2024 நேற்று பள்ளிக்கு நேரில் சென்று வழங்கினார்.
பின்னர் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். |
நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்கள், பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி, பொருளாளர் கணேஷ், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.