இந்நிகழ்வின்போது மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2025-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (31.12.2006 அன்று வரை பிறந்தவர்கள்) விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ளவும் மற்றும் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தவும் ஏதுவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2025-கான கால அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (29.10.2024) வெளியிடப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் விவரம் பின்வருமாறு:
பொதுமக்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ளும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குசாவடி அமைவிடங்களிலும் அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப படிவங்களை இன்று (29.10.2024) முதல் 28.11.2024 வரை சமர்ப்பிக்கலாம். மேலும், சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் ஒரு பகுதியாக சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் உள்ள 2222 வாக்குசாவடிகளிலும் வருகின்ற 16.11.2024, 17.11.2024 மற்றும் 23.11.2024, 24.11.2024 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். 01.01.2025-ம் நாளன்று 18 வயது பூர்த்தியடைந்த (31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ பிறந்துள்ள) நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இந்த சிறப்பு சுருக்கத்திருத்த காலத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் பழுதடைந்த மற்றும் செயல்படாத கட்டிடங்களில் அமையப்பெற்ற வாக்குசாவடிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக 99. ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் (பாகம் எண்-292), 103 பெருந்துறை சட்டமன்றதொகுதியில் (பாகம் எண்-145) என தலா ஒரு வாக்குசாவடி அமைவிடமும் மற்றும் 107 பவானிசாகர் சட்மன்ற தொகுதியில் 15 வாக்குசாவடி அமைவிடங்கள் (பாகம் எணகள்-95, 109, 110, 111, 117, 118, 236, 237, 238, 239, 242, 243, 244, 247 மற்றும் 248) என ஆக மொத்தம் 17 வாக்குசாவடியின் அமைவிடங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 959 வாக்குசாவடி அமைவிடங்களில் 2222 வாக்குசாவடி நிலையங்கள் அமைந்து உள்ளன.
அதன் விவரம் பின்வருமாறு: