ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை நடத்தும் 65 ஆவது குடியரசு தின தடகள போட்டிகள் 6.11.2024 ஆம் தேதி முதல் 08.11.2024 அன்று வரை மாணவிகளுக்கும், 09.11.2024 ஆம் தேதி முதல் 11.11.2024 அன்று வரை மாணவர்களுக்கும் நடைபெறவுள்ளது.
அதையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தலைமையில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் அவர்கள் முன்னிலையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (29.10.2024) மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் இ.கா.ப., ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனீஷ் என். அவர்கள் உட்பட துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.