ஈரோடு மாவட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு உதவிடும் வகையில், அவர்கள் சுயமாக தொழில் செய்து வருமானம் ஈட்ட வழிவகை செய்யும் பொருட்டு, கைவினைப் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கவும். சிறு தொழில் புரிவதற்கு தேவையான பயிற்சிகள் அளித்து வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ஈரோடு மாவட்ட முஸ்லிம் உதவும் சங்கம்-2 என்ற சங்கமானது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சங்கத்தின் தலைவராக கொண்டு துவங்கப்பட அரசு ஆணையிட்டுள்ளது.
இச்சங்கத்தில் ஒரு கௌரவ செயலாளர். இரண்டு கௌரவ இணை செயலாளர்கள் மற்றும் மூன்று உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு. ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் முஸ்லிம்களில் சமூகப்பணிகளில் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி மிக்க ஆர்வமுடன் செயல்படும் பிரமுகர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளதால் இச்சங்கத்தில் மேற்படி, பதவிகளில் பணியாற்றிட விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய முழுவிபரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை 15.10.2024 க்குள் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டடத்தில், நான்காம் தளத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக கூடுதல் விபரம் தேவைப்படுவோர். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண் 0424-2260155-ஐ தொடர்பு கொள்ளலாம்.