ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள அந்தியூர்-மேட்டூர் பிரிவில் அதிமுகவின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 17.10.2024 வியாழக்கிழமையன்று பவானி நகர அதிமுக சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, பவானி நகர அதிமுக செயலாளர் எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ஜுகுனு பாலு, நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் எம்.ஜி.நாத் (எ) மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்து கோஷம் எழுப்பியும் கொண்டாடினர்.
முன்னதாக, அதிமுக வை தோற்றுவித்த எம்ஜிஆர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பேச்சாளர் கோதண்டம், நிர்வாகிகள் ஏ.பிரகாஷ், பிரபாகரன், கார்த்தி அர்ஜுனன், பவானி நகராட்சி வார்டு உறுப்பினர்கள் காவேரி செந்தில், பவித்ரா கார்த்திகேயன், அதிமுக கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.