ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் (28.10.2024) நேற்று கட்சியின் மாவட்ட அளவிலான தேர்தல் பயிலரங்கம் நடைபெற்றது.
இந்த மாவட்ட அளவிலான தேர்தல் பயிலரங்கத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா கலந்து கொண்டு பேசினார்.
இந்நிகழ்வில், மாநில பொதுச் செயலாளர் ஏ. பி. முருகானந்தம், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி, தெற்கு மாவட்ட தலைவர் வேதாந்தம் ஆகியோர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.