ஈரோடு அரசு அருங்காட்சியகம் வ.உ.சி. பூங்கா வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு 'மாதந்தோறும் ஒரு பழங்காலப் பொருள்' என்ற தலைப்பில் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பொது மக்களின் பார்வைக்காக
மாக்கல் எனப்படும் கல் பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதனை பார்வையாளர்கள் ஆர்வமாக பார்வையிட்டனர்.
இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் பா.ஜென்சி கூறும்போது, 'பழங்கால மனிதர்கள் கற்களை செதுக்கி பாத்திரங்கள் உருவாக்கி சமையலுக்கு பயன்படுத்தி வந்தனர். பல்வேறு அகழ்வாய்வுகளின்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் கல் பாத்திரங்கள் கிடைத்துள்ளன. இதில் மாவுக்கல் அல்லது மாக்கல் என்ற கல்லில் செய்யப்பட்ட பாத்திரங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இரும்பு உள்ளிட்ட உலோகங்களில் பாத்திரங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு நம் முன்னோர் பயன்படுத்திய இந்த பாத்திரங்கள் இயற்கையான தாகவும், இதில் சமைத்து சாப்பிடும் உணவு சத்து மிக்கதாகவும் இருந்து வந்தன. இதுதொடர்பான அனைத்து விளக்கங்களையும் பார்வையாளர்களுக்கு கூறுகிறோம்' என்றார். இந்த மாதம் முழுவதும் அரசு அருங்காட்சியத்தில் கல் பாத்திரங்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.