ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாவடி பாளையம், நஞ்சை ஊத்துக்குளி மற்றும் அருகே உள்ள பஞ்சலிங்கபுரத்தில் இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதில் மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் சந்திரசேகரன், மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வம் பால் சரவணன், நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா தேவி சிதம்பரம், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கதிர்வேல், மொடக்குறிச்சி பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆனந்த், ஞானசுப்பிரமணியம்,
அப்பு (எ) பழனிசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர்கள் வில் மணி, செந்தில் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.