கொடுமுடி வட்டம், கிளாம்பாடி பேரூராட்சி, கருமாண்டம்பாளையம், கொங்கு மஹால் திருமண மண்டபத்தில் (26.10.2024) இன்று, அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலமாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த சிறப்பு மருத்துவ முகாமினை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றி வைத்தும் துவக்கி வைத்தார்.
நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவ நிபுணர்களால் அரசின் சார்பில் இலவச மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் வழங்கப்பட்டது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் கொடுமுடி கிழக்கு ஒன்றிய தலைவர் வக்கீல் கார்த்திகேயன், ஒன்றிய பொதுச்செயலாளர் அருன், மாவட்ட ஓ.பி.சி அணி பொதுச் செயலாளர் அருள் ஜோதி, மாவட்ட பொறுப்பாளர் மயில்சாமி, பேரூர் பொறுப்பாளர் கே.எம்.ராஜ்குமார், இளைஞர் அணி பொறுப்பாளர் சோழங்காபாளையம் அருண் ஆகியோர் உட்பட கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.