தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் இன்று (25.10.2024) ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்கார்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்காக தாட்கோ மூலம் கட்டப்பட்ட பின்னலாடை தொழில் விரிவாக்கம் மற்றும் பயனாளிகளின் பயன்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வின் போது தாட்கோ செயற்பொறியாளர் திருமதி.சரஸ்வதி, தாட்கோ மாவட்ட மேலாளர் ரா.அர்ச்சுன் மற்றும் சிப்கார்ட் செயற்பொறியாளர் திருமதி.சுஜிதா ஆகியோர் உடன் இருந்தனர்.