ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்களுடைய அறிவுறுத்துடன்படி ஈரோடு துய்யம்பூந்துறை ஊராட்சியில் கிராம சபை கூட்டம். தலைவர் பி.பேபி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒன்றிய குழுத் துணைத் தலைவர் டி.மயில் என்கின்ற சுப்பிரமணி, துணைத்தலைவர் எஸ்.தினகரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் எஸ்.முத்துசாமி, கே.மேகலா, வி.பாலசுப்பிரமணி, கே. புஷ்பவதி, கே.இந்திராணி, எம்.மஞ்சுளா, பி.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஊராட்சி செயலாளர் தியனேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்ட கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. மேலும் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.