ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எழுமாத்தூர் ஊராட்சியில் (02.10.2024) நேற்று காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு கிராம சபை கூட்டம் அதன் தலைவர் எஸ். ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் தனபால் வரவேற்புரை ஆற்றினார். இதில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து 13 தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதல் வழங்கப்பட்டு, காந்தி பிறந்தநாளை ஒட்டி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் கௌசல்யா குணசேகரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் செயலர் லோகநாதன் நன்றியுரை ஆற்றினார்.