ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் (02.10.2024) நேற்று தலைவர் சி. சுகுணா தேவி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ஆர்.பரமசிவம் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, 13 தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆர்.ஜெகநாதன், என்.சுபத்ரா, கே..சாரதா, டி.கோபிநாத், பி.ராதிகா, ஏ.சங்கர் குமார், என்.சுமதி, எஸ்.பழனியம்மாள், ஜே.சபீனா, எஸ்.ஏ.சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களை மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தின் முடிவில் செயலர் முருகானந்தம் நன்றியுரை ஆற்றினார்.