ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் கஸ்பாபேட்டை ஊராட்சியில் (02.10.2024) நேற்று கிராம சபை கூட்டம் தலைவர் (பொறுப்பு) ஏ. முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் தலைவர் ஏ. அர்ஜுனன் முன்னிலையில், துணைத் தலைவர் ஏ கே நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். இதில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 14 தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் பெண் குழந்தைகள் காப்பது குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எஸ்.தங்கராஜ், வி.கே.ரவிக்குமார், சீ.லதா, கே.கார்த்திகா, சக்தி, தீபிகா, டி.மணிகண்டன், எஸ்.ஜமுனா ராணி, பி.ரம்யா எ.கார்த்தி செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முடிவில் செயலர் மாலதி நன்றியுரை ஆற்றினார். கூட்டத்தில் முன்னதாக, மறைந்த தலைவர் ஏ.சித்ரா அவர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செய்யப்பட்டு, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.