சென்னிமலை, எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைகளின் சார்பில் சங்கத் துவக்க விழா 19.10.2024 சனிக்கிழமை பகல் 11.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் உள்ள சுத்தானந்தன் அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் “பாரத் வித்யா சிரோமணி" Dr. வசந்தா சுத்தானந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரியின் ஆலோசகர் M.V.தெய்வசிகாமணி, கல்லூரியின் முதல்வர் முனைவர். M. ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை இறுதியாண்டு மாணவன் செல்வன். எம். லோகேஷ்வரன் வரவேற்புரை ஆற்றினார். இயந்திரவியல் துறை இறுதியாண்டு மாணவி செல்வி. பி. ஸ்ரீநிகிதா சிறப்பு விருந்தினர் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பொறியாளர் K.R. சந்தோஷ்குமார் (இயக்குநர், டர்ன்ஆன் எனர்ஜி இண்டியா பிரைவேட் லிமிடெட், ஈரோடு) அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில்
இயந்திரவியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு. இத்துறைகளில் பொறியாளர்களுக்கான பல்வேறு வேலை வாய்ப்புகளைப் பற்றியும், தொழில்நுட்பத் திறன்களைப் பற்றியும், அன்றாடம் நிகழ்வை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறினார். உள்நாடுகளில் தங்களின் திறைமைகளை மேம்படுத்திக் கொண்டால், அயல்நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இயந்திரவியல் துறைத்தலைவர் முனைவர் K.P.வெற்றிவேல் மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் முனைவர் D.சபாபதி ஆகியோர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் செய்திருந்தனர். விழாவின் நிறைவாக மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவி செல்வி. பி. சுபலட்சுமி நன்றியுரை வழங்கினார். .