ஈரோடு அரச்சலூர் பகுதியில் உள்ள நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு கல்லூரியின் துணை முதல்வர் பி. சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார். அடுத்ததாக நவரசம் கல்லூரியின் தலைவர் டி கே தாமோதரன் வரவேற்புரை வழங்கினார். அடுத்த நிகழ்வாக கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா கனிஎழில், பொருளாளர் சி பழனிச்சாமி, செயலாளர் கு செந்தில்குமார், தாளாளர் விபி கோவிந்தசாமி ஆகியோர் மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர். அடுத்ததாக இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தாண்டாம்பாளையம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம் கோபாலகிருஷ்ணன் பங்கேற்று மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் எழுச்சி மிகுந்த நற்கருத்துக்களை எடுத்துரைத்தார். மேலும் இவ்விழாவினை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக வணிகவல் துறை பேராசிரியர் முனைவர் நா பூமதி நன்றியுரை வழங்கினார்.
நவரசம் கல்லூரியில் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட்டம்.
October 20, 2024
0
Tags