மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் நேற்று (09.10.2024) ஈரோடு மாவட்டம், பெரிய சடையம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பகுதிநேர நியாயவிலைக்கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து நியாயவிலை பொருட்களை வழங்கினார்.
உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.சு.நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனீஷ்.என்., ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் உட்பட பலர் உள்ளனர்.