ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் இன்று (19.10.2024) மாவட்ட நிர்வாகம் சார்பாக, செவிதிறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பொருட்டு, இ சேவை மையத்தில் PARIVAHAN என்ற இணையதளத்தில் வழியாக பதிவேற்றம் செய்திட சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் செவிதிறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டும் இ -சேவை மையத்தின் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்து ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முகாமில் செவிதிறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், பிறந்த தேதிக்கான சான்று, இரத்த வகை சான்று (Blood Group), கல்வித் தகுதிக்கான சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் PARIVAHAN என்ற இணையதளத்தில் இரண்டு சக்கர வாகன ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பம் அளித்ததற்கு 86 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒப்புதல் சீட்டு வழங்கப்பட்டது.
இம்முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, ஈரோடு மாவட்ட அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.