ஈரோட்டில் பி வி பி மேல்நிலைப்பள்ளியில், ஈரோடு மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் நடத்திய 4 ஆவது ஆண்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு ஈரோடு மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கத்தலைவர் த. வினோத்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் பொன் லோகேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், பி வி பி பள்ளி தாளாளர் அரிமா முனைவர எல் எம் ராம கிருஷ்ணன், ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அரிமா பி. பால முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை துவங்கி வைத்தார்கள். இதில் மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என ஆண், பெண் இருபாலரும் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
குத்து வரிசை, கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல் கம்பு வீச்சு, வாள் வீச்சு, ஒற்றை சுருள் வாள் வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, இரட்டைவாள் வீச்சு, மடுவு கம்புச்சண்டை உட்பட 13 பிரிவுகளில் போட்டியிட்டு மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தினார். இந்தபோட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் மாநிலப் போட்டிகளில் பங்குபெற உள்ளனர்.