நடப்பாண்டு 2024-25 ஆம் ஆண்டிற்கான விருது மற்றும் பரிசு தொகை வழங்கும் பொருட்டு பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றிய 13 வயதுக்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி-24 இல் மாநில அரசின் விருது வழங்கிட தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் https://awards.tn.gov.in 30.09.2024-க்குள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது, மேற்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு 25.12.2024 முடிய கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்விருது தொடர்பாக தேவைப்படும் விவரங்களை ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகம் 6 வது தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தெரிவித்துள்ளார்.