ஈரோட்டில் வசித்து வரும் லட்சுமணன் மற்றும் சுகுணமாலா தம்பதியரின் மகன் 14 வயதான சதின் அணீஷ். ஈரோடு RD பன்னாட்டுப் பள்ளியில் 9ஆம் வகுப்பில் கல்வி கற்று வரும் இவர் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் அமைந்துள்ள மெஜஸ்டிக் டியூசன் சென்டர் எனும் தனியார் பயிற்சி மையத்தின் பயிற்சி ஆசிரியரான ஜெகன்த குமாரிடம் ஞாபகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியெடுத்து அதன் மூலம் மனப்பாடமாக்கியவற்றை வேகமாக ஒப்புவிக்கும் திறன் கொண்ட இவர், கற்றுக் கொடுத்த தனிம வரிசை அட்டவணையின் 118 கூறுகளையும் வேகமாக ஒப்புவித்து ஒரு உலக சாதனை படைப்பதற்கான முயற்சியை பல மாதங்களாக மேற்கொண்டார். தன்னால் இயல்பை விட அதிக வேகமாக ஒப்புவிக்க முடியும் என்பதை அறிந்த சாதின் அனீஸ், தனது முயற்சியை உலக சாதனையாகப் பதிவு செய்வதற்கு சோழன் உலக சாதனைப் புத்தகநிறுவனத்தைத் தொடர்பு கொண்டார்.
இவரது முயற்சியை முறைப்படி பரிசோதித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் இவர் 20 நொடிகளில் 118 தனிம வரிசை அட்டவணையின் கூறுகளையும் ஒப்புவித்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப்பதிவு செய்தார். சோழன் உலக சாதனை படைத்த மாணவன் சதின் அணீஷ்க்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், பதக்கம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவை வழங்கப்பட்டது.