Type Here to Get Search Results !

கலெக்டர் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக உயர்மட்ட குழுக் கூட்டம்...


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.11.2024) ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, தொழிலாளர் நலத்துறை, கணிமவளத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கைத்தறித்துறை, நீர்வள ஆதாரத்துறை, வேளாண்மைப் பொறியியல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, தொடர்புடைய துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை விரைந்து முடித்திடவும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தங்குதடையின்றி சென்றயடைவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஷ், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு (ஈரோடு), துணை இயக்குநர் குலால் யோகேஷ் விலாஷ் (சத்தியமங்கலம் வன கோட்டம்), சுதாகர்  (ஆசனூர்), மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது), கா.செல்வராஜ் (வளர்ச்சி), இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.அம்பிகா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.அருணா உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.










Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.