ஈரோடு வடக்கு அரிமா சங்கம், ஈரோடு வாசன் கண் மருத்துவமனை, ERODE BIOPATH LAB மற்றும் ஈரோடு மாநகராட்சி இணைந்து ஈரோடு மாநகராட்சி ஊழியர்களுக்கான மருத்துவ முகாம் ஈரோடு மாநகராட்சியின் 3வது மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் கண் சிகிச்சை, ரத்த அழுத்தம், ரத்த வகை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனை போன்ற மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டது.