கோபிசெட்டிபாளையத்தில் ஸ்டார் ஹெல்த் முகவர்களுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறுவனத்தின் சார்பாக புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட சூப்பர் ஸ்டார் பாலிசியை கோபி அபி S.K மருத்துவமனையின் தலைமை மருத்துவர் எஸ். குமரேசன் அவர்கள் பாலிசியை முகவர்களுக்காக அறிமுகப்படுத்தி, அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள் பற்றியும், நோய்களின் தீவிர தன்மையைப் பற்றியும் முகவர்களிடத்தில் உரையாற்றினார்.
சேலம் மண்டல மேலாளர் வி. ஜெகதீசன் அவர்கள் பேசுகையில் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் தமிழ்நாடு முழுவதும் ரூபாய் 701 கோடி ரூபாய் மதிப்புள்ள கிளைம் தொகை மற்றும் சேலம் மண்டலத்தில் ரூபாய் 102 கோடி மதிப்புள்ள கிளைம் தொகை, ஈரோடு கிளைகளில் 22 கோடி மற்றும் கோபிசெட்டிபாளையம் கிளையில் இதுவரையில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கிளைம் தொகைகளை ஸ்டார் ஹெல்த் நிறுவனம் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டதைத் தெரிவித்தார்.
சேலம் மண்டலத்தின் மூத்த பயிற்சியாளர் ஜே.பிரின்ஸ் செல்லதுரை அவர்கள் சூப்பர் ஸ்டார் பாலிசியில் அறிமுகம் செய்யப்பட்ட வரம்பற்ற அறை வாடகை மற்றும் அளவில்லா கிளைம் தொகை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளிட்ட ஐந்து நோய்களுக்கு பாலிசி எடுத்த 31 வது நாட்களில் இருந்து க்ளைம் பெறலாம், கிளைம் பெறும் வரையில் பிரீமியம் தொகையில் மாற்றம் இல்லை போன்ற சூப்பர் ஸ்டார் பாலிசியின் முக்கியமான பலன்களை முகவர்கள் மத்தியில் பயிற்சி அளித்தார்.