கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள பச்சைமலை பாலமுருகன் கோயிலுக்கு மாணவ - மாணவியர்கள் கல்வி பயணம் மேற்கொண்டனர். ஶ்ரீ குருகுலம் பப்ளிக் ஸ்கூல், பாடநூல் கல்வியுடன் நடைமுறை அறிவையும் வளர்க்கும் நோக்கில் மாணவர்களுக்கு கல்வி பயணங்களை ஏற்பாடு செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஸ்ரீ குருகுலம் பப்ளிக் ஸ்கூல் பள்ளியின் 1 முதல் 4ஆம் வகுப்பு மாணவர்கள் பச்சைமலை பாலமுருகன் கோவிலுக்கு கல்வி பயணமாக சென்றனர்.
இந்த பயணத்தில், மாணவர்கள் கோவிலின் வரலாறு, கட்டிடக் கலை மற்றும் ஆன்மீக பண்பாட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர் மற்றும் குழந்தைகள் அனைவரும் பச்சைமலை சுவாமி சன்னதியில் அமர்ந்து திருப்புகழ், கந்தபுராணம், ஹர ஹர கோசமிட்டு பாடி சுவாமியை வழிபட்டு இயற்கையின் அழகையும், அமைதியான சூழலையும் அனுபவித்து மகிழ்ந்தனர்.
மேலும், இந்த கல்வி பயணமானது மாணவர்களின் அறிவியற் சாதனையை விரிவுபடுத்தும் வகையில் நல்ல அனுபவமாக அமைந்தது. இச்சிறப்பான அனுபவத்தை வழங்கி மாணவர்களின் மனதை ஊக்குவித்த பள்ளி நிர்வாகத்திற்கும், பள்ளி முதல்வருக்கும், பயணத்தை சிறப்பாக நடத்த உதவிய ஆசிரியர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.