ஈரோட்டின் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் அவர்களின் 51ஆவது நினைவு தினத்தை ஒட்டி, மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களின் முகாம் அலுவலகத்தில், அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியாரின் திரு உருவப் படத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தார்.
அதனை தொடர்ந்து, ஈரோடு தெற்கு மாவட்ட அலுவலகத்திலும், பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ், ஈரோடு மாநகராட்சியின் மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வி. செல்வராஜ் மற்றும் கழக மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய கழக, பகுதி கழக, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணியினர் கலந்து கொண்டனர்.