பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில், ஈரோடு எக்ஸலண்ட் அரிமா சங்கம் ஏற்று நடத்திய நிகழ்ச்சிகளான மாவட்ட ஆளுநரின் இரண்டாவது வட்டார ஆலோசனைக் கூட்டம், வட்டார கூட்டு கூட்டம் மற்றும் முன்னாள் தலைவர்கள் தினம் ஆகியவை கடந்த 17.12.2024 செவ்வாய்க்கிழமை ஈரோடு கடோத்கஜா ஹோட்டலில் நடைபெற்றது.
வட்டாரத் தலைவர் அரிமா K.C. தங்கமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா பூர்ணிமா டன்னா மற்றும் முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா D.ரவிசந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா T. ரவிவர்மா அவர்கள் முன்னாள் தலைவர்களைப் பாராட்டி உரையாற்றினார். இதில், மண்டலத் தலைவர் அரிமா சந்திரா ஈஸ்வரன் அவர்கள் கருத்துரை வழங்கியுள்ளார். மாவட்ட கண்ணொளிதிட்டத் தலைவர் அரிமா Dr.C. மோதிலால் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு எக்ஸலண்ட் அரிமா சங்க தலைவர் அரிமா A. மோகன், செயலர் (நிர்வாகம்) அரிமா T.S.P. தாமோதரன், செயலர் (சேவை) அரிமா A. இப்ராஹிம் சுஜாத், பொருளர் அரிமா E.N. முகம்மது உவைஸ், முதல் உதவித் தலைவர் அரிமா T. ஹரி,
ஈரோடு சுப்ரீம் அரிமா சங்க தலைவர் அரிமா S. அசோக்குமார், செயலர் (நிர்வாகம்) அரிமா K. குமார், செயலர் (சேவை) அரிமா S.P. ராஜமாணிக்கம், பொருளர் அரிமா P. கதிர்வேல், முதல் உதவித் தலைவர் அரிமா M.ரமேஷ்குமார், ஈரோடு காவிரி அரிமா சங்க தலைவர் அரிமா S. சரவணன், செயலர் அரிமா V. சந்துரு, பொருளர் அரிமா N. கிஷோர்குமார், முதல் உதவித் தலைவர் அரிமா U.தர்மசிவம், ஈரோடு கோல்டன் சிட்டி அரிமா சங்க தலைவர் அரிமா A.S.P. பாஸ்கர், செயலர் அரிமா M. வெங்கடசாலம், பொருளர் அரிமா N.A. புனிதா, முதல் உதவித் தலைவர் அரிமா S.R. காண்டீபன், ஈரோடு ஸ்டார் அரிமா சங்க தலைவர் அரிமா L. மாணிக்கசுந்தரம், செயலர் (நிர்வாகம்) அரிமா C. துரைசாமி, செயலர் (சேவை) அரிமா O. மனோஜ், பொருளர் அரிமா P. யுவராஜ், முதல் உதவித் தலைவர் அரிமா A.C. மைக்கேல், ஈரோடு எல்லோ சன்சிட்டி அரிமா சங்க பட்டய தலைவர் அரிமா ஜஹேராதைசூன், பட்டய செயலர் (நிர்வாகம்) அரிமா தைசூன், பட்டய செயலர் (சேவை) அரிமா A. கமல்ராஜ், பட்டய பொருளர் அரிமா T. ஹரிஹரன், முதல் உதவித் தலைவர் அரிமா T. மகேஸ்ரி மற்றும் அரிமாக்கள் பலர் கலந்து கொண்டனர்.
VIDEO & PHOTO GALARY...