மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (20.12.2024) ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில், 951 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் 559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து. 133 கோடியே 66 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 222 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி. 50,088 பயனாளிகளுக்கு 284 கோடியே 2 இலட்சம் ரூபாய் செலவிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பள்ளிக் கல்வித் துறை, நெடுஞ்சாலைகள் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம், 951 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் 559 முடிவுற்றப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.


ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நீர்வளத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம், 133 கோடியே 66 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 222 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 7600 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்குதல் மற்றும் 422 பயனாளிகளுக்கு சமத்துவபுரம் திட்டத்தில் வீடுகள் வழங்குதல், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 3803 பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசனம், விவசாய இடுபொருட்கள் வழங்குதல், அடமானக் கடன். சோலார் பம்புகள் வழங்குதல், வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தில் உதவிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்பில் 877 பயனாளிகளுக்கு சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் மானியக்கடன்கள், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், பயிர் கடன், சிறு வியாபாரிகளுக்கான கடன், வீட்டுக்கடன் 8 உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், சத்யவாணிமுத்து அம்மையார் இலவச தையல் இயந்திர திட்டம், திருமண உதவித் திட்டம், முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மோட்டார் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர். சக்கர நாற்காலிகள், திறன் கைபேசி, தையல் இயந்திரம் வழங்குதல், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டிகள் வழங்குதல், தேவாலயம் சீரமைப்புப் பணிகளுக்கு உதவிகள் என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 50,088 பயனாளிகளுக்கு 284 கோடியே 2 இலட்சம் ரூபாய் செலவிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
.jpeg)
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் ப. செல்வராஜ், கே.இ.பிரகாஷ், கு.சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி. வெங்கடாசலம், திருமதி சி. சரஸ்வதி, ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.