கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கோபி பசுமை நகர் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
தலைவர் ஆர்.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கோபி காவல் நிலைய ஆய்வாளர் காமராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுத்தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மற்றும் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பாரட்டுகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட போட்டோகிராபர்கள், வீடியோ ஒளிப்பதிவாளர்கள், மாணவ - மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.