மொடக்குறிச்சி வட்டம், துய்யம் பூந்துறை ஊராட்சி, டி. மேட்டுப்பாளையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அவல்பூந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தும், ரிப்பன் வெட்டியும் முகாமினை துவக்கி வைத்தார்.
நடைபெற்ற முகாமில், கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தையும், முதியோர்களுக்கான ஊட்டச்சத்து மருந்துகளையும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் வழங்கினார்.
நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.