சுதந்திர போராட்ட வீரர் தியாகி மாவீரன் பொல்லான் அவர்களின் 256 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களின் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தார்.
அதனை தொடர்ந்து, ஈரோடு தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலுவலகத்திலும் மாவீரன் பொல்லான் அவர்களின் முழு உருவப்படத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர். மா.மதிவேந்தன் அவர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்.
அதனை தொடர்ந்து, வடுகபட்டி பேரூராட்சி, ஜெயராமபுரத்தில் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர். மா.மதிவேந்தன் அவர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசின் சார்பில், அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வுகளில், ஆதி தமிழர் பேரவை தலைவர், இரா. அதியமான் அவர்களும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களும், ராஜ்ய சபா உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ் அவர்களும், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ் அவர்களும், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி நவமணி கந்தசாமி அவர்களும், ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்களும், துணை மேயர் வி .செல்வராஜ் அவர்களும், பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன் அவர்களும், அனைத்து அருந்ததியினர் கூட்டமைப்பு நிர்வாகிகளும் மற்றும் திமுக கழக மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.