முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவையொட்டி ஈரோட்டில் இன்று (28.12.2024) ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அனைத்து கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்புகளை இணைத்து அமைதி பேரணி மற்றும் புகழஞ்சலி நடைபெற்றது.
அமைதி பேரணி, ஈரோடு மாநகராட்சி காந்தி சிலையிலிருந்து பன்னீர்செல்வம் பூங்கா வரை நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக சர்வ கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்புகளையும் இணைத்து நடைபெற்ற இந்நிகழ்வில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.திருச்செல்வம் தலைமையில்,
ஈரோடு மாமன்ற துணை மேயர் செல்வராஜ், திமுக பகுதி செயலாளர் Vc. நடராஜன், முன்னாள் மத்திய மற்றும் மாநில அமைச்சர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், சிபிஐ முன்னாள் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, சிபிஐஎம் நகர செயலாளர் சுந்தர்ராஜன், சிறுபான்மை மக்கள் நல குழு தலைவர் ப.மாரிமுத்து, ஐக்கிய ஜனதா தளம் கார்த்திகேயன், எஸ்டிபிஐ கோவை மண்டல செயலாளர் லுக்மானுல் அக்கீம், தமிழ்நாடு வெற்றி கழகம் மாநகரத் தலைவர் அக்கீம், விஜி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் லாரிப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சித்திக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சேட்டு, முன்னாள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர் எம் பழனிசாமி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி ராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் ஈ பி ரவி, மாவட்ட துணைத் தலைவர் பா ராஜேஷ் ராஜப்பா,
மண்டல தலைவர் H.M. ஜாஃபர் சாதிக், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில துணைத்தலைவர் எம். ஜவஹர் அலி, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் எம் ஜுபைர் அகமது, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே.என். பாஷா, துணைத் தலைவர்களான கே புனிதன்,கே எஸ் செல்வம், அம்மன் மாதேஷ், பாஸ்கர்ராஜ், பொதுச் செயலாளர்களான ஏசி சாகுல் அமீத், ஏ. வின்சென்ட், தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் (டிசிடியூ) மாநில துணைத்தலைவர் குளம் எம் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்களான வி கே சச்சிதானந்தம், மாமரத்து பாளையம் கோபி, முன்னாள் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே விஜய் கண்ணா, ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சித்தோடு எஸ் பிரபு, சிட்டி கல்கி, ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி எம். ஞானதீபம், என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் அன்னபூரணி, சேவாதள மாநில செயலாளர் எம் பேபி, மாவட்ட நிர்வாகிகளான சங்கு நகர் சதாம் உசேன், முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, கே ஜே டிட்டோ, சூரம்பட்டி விஜயகுமார், நடராஜ் செட்டியார், ராஜாஜிபுரம் குமரேசன், எஸ் தங்கவேல் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.