ஈரோடு மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் (Erode district civil engineers association) சார்பாக 'ERODE BUILD EXPO - 2024' என்ற பெயரில் மாபெரும் கட்டிட பொருட்கள் கண்காட்சி 27.12.2024 முதல் 30.12.2024 வரை 4 நாட்கள் ஈரோடு பரிமளம் மகாலில் நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியின் துவக்க விழாவினை மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் இன்று திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி. நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள், துணை மேயர் V. செல்வராஜ் அவர்கள், ஈரோடு மாவட்ட கட்டிடபொறியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.