ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி தெற்கு ஒன்றிய உட்பட்ட நஞ்சை கோபி ஊராட்சி குளவி கரட்டில் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில், கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன் அவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கியும், கழகக் கொடி ஏற்றியும், அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் கே. பி. கைலாஷ் குமார், நஞ்சை கோபிகணேஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.