நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக சீதாலட்சுமி என்பவரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிவித்திருந்தார்.
அதன்படி,ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் சீதாலட்சுமி தனது வேட்பு மனுவை 17.01.2025 இன்று தாக்கல் செய்தார். மேலும் தனக்கு மைக் சின்னத்தை ஒதுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.