ஈரோடு கோட்டை சின்னப்பாவடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பூச்சாட்டுதல் நடைபெற்று, குண்டம் திருவிழா 24.01.2025 இன்று, வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த குண்டம் திருவிழாவில், அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று இரவு குண்டம் பற்றவைக்கப்பட்டு, இன்று அதிகாலையில் ஏராளமானோர் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்த குண்டம் இறங்கும் திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பக்தியுடன் நடனமாடி அம்மனை தரிசித்தனர்.