ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் குறிஞ்சி என்.சிவகுமார் தலைமையில்,
ஈரோடு மாநகராட்சி இரண்டாம் மண்டல தலைவர் காட்டு சுப்பு (எ) சுப்ரமணியம், கோட்டை பகுதி கழக செயலாளர் பொ.இராமச்சந்திரன், விவசாய அணி ஈரோடு மாவட்ட துணை அமைப்பாளர் ஆதித்யா அருண் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர் பழனியப்பா செந்தில் குமார், 18 -வது வார்டு துணைச் செயலாளர் அப்பாசாமி மற்றும் நேதாஜி தினசரி காய்கறி சந்தை நிர்வாகிகள் உட்பட பலர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.